எக்ஸ் வலைதளத்துக்கு தடை

peoplenews lka

எக்ஸ் வலைதளத்துக்கு தடை

பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரபல சமூக வலைத்தளமான 'எக்ஸ்' தளத்துக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதில் அதன் பயனர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் உள்பட பலர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாகிஸ்தான் அரசு சார்பில் உள்துறை மந்திரி குர்ரம் ஆகா அறிக்கை ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்தார். அதில் பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியது. எக்ஸ் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அதனை நிறுவனம் சரிசெய்யவில்லை. எனவேதான், தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எக்ஸ் தளத்தின் செயற்பாடு தொடர்பான பாகிஸ்தான் அரசின் கவலைகளை புரிந்துகொள்ள அந்த அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share on

உலகம்

peoplenews lka

ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புதின்...

ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.  இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.. Read More

peoplenews lka

பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்...

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்... Read More

peoplenews lka

“தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்”...

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது... Read More

peoplenews lka

தாய்வானின் நில அதிர்வு...

தாய்வானின் ஹுவாலியன் (Hualien) பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது... Read More